/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாதவரத்தில் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலி மாதவரத்தில் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலி
மாதவரத்தில் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலி
மாதவரத்தில் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலி
மாதவரத்தில் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலி
ADDED : செப் 25, 2025 02:43 AM

மாதவரம்:மாதவரம் அருகே லாரி மோதிய விபத்தில், மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தார்.
புழல் அடுத்த புத்தகரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் தவசிலிங்க பெருமாள், 48. இவர், வீட்டருகே மளிகைக் கடை நடத்தி வந்தார்.
கடைக்கான பொருட்கள் வாங்க, நேற்று காலை தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகில் உள்ள, மொத்த வியாபார கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
மஞ்சம்பாக்கம் சந்திப்பில் மஞ்சம்பாக்கத்தில் இருந்து வந்த லாரி திடீரென திரும்பும்போது, இவரது ஸ்கூட்டரில் மோதியது. இதில் கீழே விழுந்த தவசிலிங்க பெருமாள் மீது, லாரி டயர் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.