/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தங்கம், வெள்ளி பல்லிகள் வரதர் கோவிலில் இடமாற்றம் தங்கம், வெள்ளி பல்லிகள் வரதர் கோவிலில் இடமாற்றம்
தங்கம், வெள்ளி பல்லிகள் வரதர் கோவிலில் இடமாற்றம்
தங்கம், வெள்ளி பல்லிகள் வரதர் கோவிலில் இடமாற்றம்
தங்கம், வெள்ளி பல்லிகள் வரதர் கோவிலில் இடமாற்றம்
ADDED : ஜூன் 22, 2025 07:49 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதி வெளி பிரகாரத்தில் வடக்கு பக்கமாக, கச்சிவாய்த்தான் மண்டபத்திற்கு அருகில் உள்ள விதானத்தில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பல்லி அமைக்கப்பட்டு உள்ளது.
பல்லி முதலான தோஷம் நீங்கும் என ஐதீகம் நிலவுவதால், இப்பல்லிகளை, பக்தர்கள் தொட்டு தரிசனம் செய்வர். இதற்காகவே, ஏராளமான பக்தர்கள் தினமும் வருவர்.
இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்து வரும் திருப்பணி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகள், அதே பிரகாரத்தில் தெற்கு பக்கத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
திருப்பணி முடிந்து, 20 நாட்களில் மீண்டும் வடக்கு திசையிலேயே பல்லி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என, அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.