Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 21 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல் சோழவரத்தில் நான்கு பேர் கைது

21 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல் சோழவரத்தில் நான்கு பேர் கைது

21 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல் சோழவரத்தில் நான்கு பேர் கைது

21 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல் சோழவரத்தில் நான்கு பேர் கைது

ADDED : ஜூன் 02, 2025 11:19 PM


Google News
சோழவரம், :ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், சோழவரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, சோழவரம் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சோழவரம் அடுத்த அம்பேத்கர் நகரில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

அதில், 21 கிலோ கஞ்சா மற்றும் 3,093 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட்ட துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன், 27, கிளினர் கோயில்ராஜ், 62, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சோழவரம் அடுத்த சிவந்தி ஆதித்தனார் நகரில், தனியார் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த, 3,500 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து, கடத்தலில் தொடர்புடைய தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், 25, துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, 42, ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us