/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரூ.3 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்ரூ.3 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
ரூ.3 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
ரூ.3 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
ரூ.3 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
ADDED : பிப் 05, 2024 11:29 PM
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், 2.80 கோடி ரூபாய் மதிப்பில், திருத்தணி பொதுப்பணித் துறையின் மூலம் 12 வகுப்பறைகள், இரண்டு கழிப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருத்தணி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தலைமை வகித்தார். இதில், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று கட்டடத்திற்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
அதே போல் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலஞ்சேரி கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர், திருத்தணி எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து, 13.35 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலஞ்சேரியில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.