/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/14 வகுப்பறை கட்டடங்களுக்கு மத்துார் அரசு பள்ளியில் அடிக்கல்14 வகுப்பறை கட்டடங்களுக்கு மத்துார் அரசு பள்ளியில் அடிக்கல்
14 வகுப்பறை கட்டடங்களுக்கு மத்துார் அரசு பள்ளியில் அடிக்கல்
14 வகுப்பறை கட்டடங்களுக்கு மத்துார் அரசு பள்ளியில் அடிக்கல்
14 வகுப்பறை கட்டடங்களுக்கு மத்துார் அரசு பள்ளியில் அடிக்கல்
ADDED : ஜன 30, 2024 10:28 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ-- -- மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து திருத்தணி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முரளி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மத்துார் அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின், நபார்டு -2023-- -- 24ம் ஆண்டு திட்டத்தின், 3.48 கோடி ரூபாய் மதிப்பில், 14 வகுப்பறைகள், 4 கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் திருத்தணி தி.மு.க., --எம்.எல்.ஏ., சந்திரன், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
புதிதாக அமையவுள்ள பள்ளி கட்டடத்தில், தரைத்தளம், முதல்தளம், இரண்டாவது தளத்தில், 14 வகுப்பறைகளும், ஒரு ஆண் கழிப்பறையும், 3 பெண் கழிப்பறையும் மற்றும் தலைமை ஆசிரியர் அறை அமையும் என, உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்தார்.