/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீப்பற்றும் காப்பு காடுகள் வனத்துறை கண்காணிப்பு தீப்பற்றும் காப்பு காடுகள் வனத்துறை கண்காணிப்பு
தீப்பற்றும் காப்பு காடுகள் வனத்துறை கண்காணிப்பு
தீப்பற்றும் காப்பு காடுகள் வனத்துறை கண்காணிப்பு
தீப்பற்றும் காப்பு காடுகள் வனத்துறை கண்காணிப்பு
ADDED : மார் 25, 2025 06:32 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு வனத்துறைக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் காப்பு காடுகள் உள்ளன. இங்கு மான், மயில், காட்டுப்பன்றி, காடை, கவுதாரி என, பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.
கோடை காலத்தில், இந்த காப்பு காடுகள் தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் தீப்பிடிக்கிறதா அல்லது மர்ம நபர்கள் செய்யும் சேட்டையால் நடக்கிறதா என்பது இதுவரை கண்டறிய முடியவில்லை. இந்த தீ விபத்துகளால், வன விலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. காப்பு காடுகளில் வளர்ந்துள்ள மரங்களும் தீயில் எரிந்து நாசமாகின்றன. மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து, பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகள், நேற்று விடியங்காடு, நாகபூண்டி, புதுார் மேடு, பைவலசா, வேணுகோபாலபுரம் காப்பு காடுகளில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
மேலும், காப்பு காடுகளை பாதுகாக்க வேண்டியது குறித்து, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.