/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வெள்ளம் சூழும் அபாயம்: சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு வெள்ளம் சூழும் அபாயம்: சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு
வெள்ளம் சூழும் அபாயம்: சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு
வெள்ளம் சூழும் அபாயம்: சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு
வெள்ளம் சூழும் அபாயம்: சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு
ADDED : செப் 23, 2025 12:16 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே வெள்ள அபாய அச்சத்தில், தனியார் கிடங்கிற்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏடூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே கும்புளி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டி, வங்க கடலுடன் இணையும் ஏரிகளின் உபரிநீர் கால்வாய் உள்ளது.
அதனருகே, தனியார் நிறுவனம் சார்பில், கிடங்கு நிறுவும் பணிக்காக, இடத்தை சுற்றிலும் 15 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த கும்புளி கிராம மக்கள், நேற்று எளாவூர் - ஏடூர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பாக்கம் போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்தனர்.
அப்போது, கிராம மக்கள் கூறுகையில், 'மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி வழிந்து, கும்புளி கிராமத்தை தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. தற்போது, சுற்றுச்சுவர் அமைத்தால், கிராமம் முழுதும் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது' என தெரிவித்தனர்.
'தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டு, பேச்சு நடத்தப்படும்' என, போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அதன்பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.