/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பிப். 3ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்பிப். 3ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பிப். 3ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பிப். 3ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பிப். 3ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜன 24, 2024 11:42 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பாண்டூரில், வரும் பிப். 3ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் பிப். 3ம் தேதி திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லுாரியில் நடக்கிறது.
காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8, 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.