/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளால் விவசாயிகள் கலக்கம் விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளால் விவசாயிகள் கலக்கம்
விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளால் விவசாயிகள் கலக்கம்
விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளால் விவசாயிகள் கலக்கம்
விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளால் விவசாயிகள் கலக்கம்
ADDED : மார் 24, 2025 02:23 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, 850க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகம் மற்றும் சாலை பகுதியில், கடந்த சில நாட்களாக பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிக்கின்றன. இந்த பன்றிகள், பள்ளிக்கு வரும் மாணவ ---- மாணவியரை கடிக்க பாய்வதால் அச்சமடைந்துள்ளனர்.
தற்போது, பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மற்ற பள்ளிகளில் இருந்து திருவாலங்காடு அரசு பள்ளிக்கு தேர்வெழுத வரும் மாணவர்களை, பன்றிகள் அச்சுறுத்துவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். பள்ளி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால், மாணவர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
எனவே, மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலும், சுகாதார சீர்கேடை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.