/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 83 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் 83 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
83 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
83 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
83 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : ஜூன் 12, 2025 09:44 PM
திருத்தணி:'திருத்தணியில் நடந்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 83 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் உள்ளது' என, விவசாயிகள் தெரிவித்தனர்.
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நேற்று நடந்தது.
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
இதில், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் பங்கேற்று பேசியதாவது:
காபூர்கண்டிகையில் புதியதாக ஏற்படுத்தப்பட்ட பீடரில் 'சர்க்யூட் பிரேக்கர்' தனியாக பொருத்தாமல் உள்ளது.
இதனால் 83 கிராமங்களில் மிக குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் தங்களது மின்மோட்டார்களை இயக்க முடியாமல், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் வீடுகள் மற்றும் தெருக்களில் மின்விளக்குகளும் சரியாக எரியவில்லை.
உடனடியாக, சர்க்யூட் பிரேக்கர் அமைத்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.
திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூரில், 230 கி.வோ. திறன் கொண்ட புதிய துணைமின் நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி பல மாதங்கள் ஆகியும், பணிகள் துவங்காமல் மின்வாரிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
துணைமின் நிலையம் அமைத்தால் 3,000 விவசாய மின்இணைப்புகள் கூடுதலாக வழங்க முடியும். எனவே திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்பார்வை பொறியாளர் சேகர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.