Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தண்டவாளத்தில் கற்கள் வைத்து சதி திருத்தணியில் விரைவு ரயில் தப்பியது

தண்டவாளத்தில் கற்கள் வைத்து சதி திருத்தணியில் விரைவு ரயில் தப்பியது

தண்டவாளத்தில் கற்கள் வைத்து சதி திருத்தணியில் விரைவு ரயில் தப்பியது

தண்டவாளத்தில் கற்கள் வைத்து சதி திருத்தணியில் விரைவு ரயில் தப்பியது

ADDED : ஜூன் 08, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்தில் நான்கு பாதைகள் உள்ளன. இதில், இரண்டு பாதைகள், மின்சார ரயில் மற்றும் சரக்கு ரயில் நின்று செல்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இரு பாதை, சென்னை மார்க்கத்திற்கும், திருப்பதி மார்க்கத்திற்கும் செல்லும் வகையில் உள்ளன.

நகரியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் கருடாத்ரி விரைவு ரயில், நேற்று காலை வந்து கொண்டிருந்தது.

அப்போது, திருத்தணி அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியில், தண்டவாளத்தில் கற்களை வைத்திருப்பதாக, திருத்தணி ரயில்வே ஊழியர்களுக்கு நேற்று காலை 8:00 மணிக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு சென்ற அவர்கள், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரு கருங்கற்களை அகற்றினர்.

குறித்த நேரத்தில் ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றியதால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.

அரக்கோணம் ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் கற்கள் வைத்த நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us