/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நெரிசல் 'ரவுண்டானா' அமைக்க எதிர்பார்ப்பு தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நெரிசல் 'ரவுண்டானா' அமைக்க எதிர்பார்ப்பு
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நெரிசல் 'ரவுண்டானா' அமைக்க எதிர்பார்ப்பு
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நெரிசல் 'ரவுண்டானா' அமைக்க எதிர்பார்ப்பு
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நெரிசல் 'ரவுண்டானா' அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 06, 2025 02:35 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை அமைந்துள்ளது. இந்த இடத்தில், திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையும் சந்திக்கிறது. நான்கு சாலை சந்திக்கும் இடத்தில், சாலையோர கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
மேலும், நான்கு சாலை பிரியும் இடமும் குறுகலாக இருந்ததால், அடிக்கடி நெரிசல் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். எதிர்ப்பு தெரிவித்த கடைக்காரர்களிடம், நெரிசல் ஏற்படுவதால் அங்கு மழைநீர் கால்வாய் மற்றும் 'ரவுண்டானா' அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின், அந்த இடத்தில் இதுவரை 'ரவுண்டானா' அமைக்காமல், பணி கிடப்பில் போடப்பட்டது.
இதனால், மீண்டும் கூட்டுச்சாலை சந்திப்பில் கடைக்காரர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும், நான்கு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. தற்போது, திருநின்றவூர் - பெரியபாளையம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அப்பணி நிறைவடைந்தால், ஆவடி பகுதியில் இருந்து அதிகளவில் வரும் கனரக வாகனங்கள் அச்சாலையை பயன்படுத்தும் போது, மேலும் நெரிசல் அதிகரிக்கும்.
எனவே, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்பை தவிர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.