/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரண்வாயல்குப்பம் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அரண்வாயல்குப்பம் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்
அரண்வாயல்குப்பம் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்
அரண்வாயல்குப்பம் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்
அரண்வாயல்குப்பம் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்
ADDED : ஜூன் 09, 2025 03:11 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், இந்த நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.
இந்த நெடுஞ்சாலையில், பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரண்வாயல் குப்பம்
திருவள்ளூர் அடுத்துள்ளது அரண்வாயல்குப்பம். இங்கிருந்து, கொப்பூர் வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும்1,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் அரண்வாயல்குப்பம் முதல் கொப்பூர் செல்லும் நெடுஞ்சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் செடி, கொடிகள் சூழ்ந்து, சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.