/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புழுதி பறக்கும் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம் புழுதி பறக்கும் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
புழுதி பறக்கும் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
புழுதி பறக்கும் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
புழுதி பறக்கும் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
ADDED : மே 23, 2025 10:47 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து பிரியும் இணைப்பு சாலை வழியாக, தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு, நுாற்றுக்கணக்கான நிலக்கரி லாரிகள் சென்று வருகின்றன.
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால், இணைப்பு சாலை பழுதடைந்து புழுதி பறக்கிறது. நிலக்கரி லாரி சென்றால், சாலை முழுதும் புழுதி புயல் சூழ்ந்தது போல் காட்சியளிக்கும். இதனால், அவ்வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், அப்பகுதிவாசிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, இணைப்பு சாலையை தரமாக மாற்றி அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.