Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புழுதியாக மாறிய இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் சிரமம்

புழுதியாக மாறிய இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் சிரமம்

புழுதியாக மாறிய இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் சிரமம்

புழுதியாக மாறிய இணைப்பு சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் சிரமம்

ADDED : மார் 19, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்த பிரியும் இணைப்பு சாலை வழியாக, தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில், அதிக பாரம் கொண்ட நிலக்கரி துகள்கள் ஏற்றி செல்லப்படுகின்றன.

அந்த லாரிகளின் பாரம் தாங்காமல், சாலை அடிக்கடி பழுதாகி பள்ளம் ஏற்படுவதும், பள்ளத்தை ஜல்லி கற்கள் கொண்ட கலவையால் நிரப்புவதும் வாடிக்கையாக உள்ளது. சாலை முழுதும் அக்கலவை பரவி இருப்பதால், எப்போதும் புழுதி காடாக காட்சியளிக்கிறது.

இதனால், அவ்வழியாக தாசில்தார் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், போக்குவரத்து துறையின் ஓட்டுனர் பயிற்சி பிரிவு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் சிந்தலகுப்பம் கிராமம் செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக நடந்து செல்வோரும், இருசக்கர வாகன ஓட்டிகளும் புழுதி சூழ்ந்த சாலையில் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, நிலக்கரி லாரிகளின் பாரத்திற்கு ஏற்ப, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை தரமாக அமைக்க வேண்டும். அதுவரை, புழுதி பறக்காமல் இருக்க, டேங்கர் லாரி வாயிலாக சாலையில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us