போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது
போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது
போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது
ADDED : பிப் 24, 2024 10:31 PM
திருத்தணி,ந்திர மாநிலத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் திருத்தணி பகுதிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவுபடி திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சித்துார் மாவட்டம் நகரி பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட, ஹான்ஸ், கூலி பாக்கு உட்பட, 2, 500 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் நகரி பகுதியைச் சேர்ந்த சிவா, 34 என தெரிந்தது. போலீசார் சிவாவை கைது செய்தனர்.