போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 27, 2025 08:52 PM
பொன்னேரி:பொன்னேரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முதல்வர் ஜெயசகீலா, போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், இளைய தலைமுறையினர் போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்னேரி எஸ்.ஐ., சீனிவாசன், 'போதை பழக்கத்திற்கும், குற்ற சம்பவங்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது, போதை பழக்கத்தை தவிர்த்தால், குற்ற சம்பவங்களை தவிர்க்கலாம்' என தெரிவித்தார்.
உதவி பேராசிரியர்கள் முனைவர் சரவணன், முனைவர் சுருளிவேல் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.