/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரிகள் உரசியதில் ஓட்டுநர் படுகாயம் லாரிகள் உரசியதில் ஓட்டுநர் படுகாயம்
லாரிகள் உரசியதில் ஓட்டுநர் படுகாயம்
லாரிகள் உரசியதில் ஓட்டுநர் படுகாயம்
லாரிகள் உரசியதில் ஓட்டுநர் படுகாயம்
ADDED : ஜூன் 02, 2025 03:46 AM

திருத்தணி:ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் இருந்து, 'சிசிடிவி' கேமராவின் உதரிபாகங்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது.
முருக்கம்பட்டு - தரணிவராகபுரம் பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே, ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, காஞ்சிபுரத்தில் இருந்து டிப்பர் லாரியின் உதிரிபாகம் ஏற்றி வந்த லாரி உரசியது. இந்த விபத்தில் 'சிசிடிவி' கேமரா ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரான, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பவர் படுகாயமடைந்தார்.
அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லாரிகள் உரசியதில், 'சிசிடிவி' கேமரா உதிரிபாகங்கள், சாலையோரம் 25 மீ., துாரத்திற்கு சிதறியது. அங்கு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.