/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாவட்ட கபடி போட்டி டி.ஜெ.எஸ்., பள்ளி வெற்றிமாவட்ட கபடி போட்டி டி.ஜெ.எஸ்., பள்ளி வெற்றி
மாவட்ட கபடி போட்டி டி.ஜெ.எஸ்., பள்ளி வெற்றி
மாவட்ட கபடி போட்டி டி.ஜெ.எஸ்., பள்ளி வெற்றி
மாவட்ட கபடி போட்டி டி.ஜெ.எஸ்., பள்ளி வெற்றி
ADDED : பிப் 05, 2024 11:35 PM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜெ.எஸ்., கல்வி குழு வளாகத்தில், திருவள்ளூர் மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டிகள் நடந்தன.
வயது வாரியாக இரு பிரிவுகளாக நடந்த போட்டியில், 28 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
அதில், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், டி.ஜெ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், முதல் இடம் பிடித்தனர்.
அந்த அணிக்கு, 8,000 ரூபாய் ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டன.
பள்ளி தாளாளர் பழனி தலைமையில், வெற்றி பெற்ற அணிக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் ஞானபிரகாசம், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.