/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயில் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு ரயில் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு
ரயில் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு
ரயில் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு
ரயில் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு
ADDED : செப் 11, 2025 09:48 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலை நுழைவாயிலில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து பிரியும் ரயில் நிலைய சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் சென்று வருகின்றனர்.
இந்த நுழைவாயிலின், ஜி.என்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு, ரயில் பயணியரை ஏற்றி செல்ல எப்போதும் ஷேர் ஆட்டோக்கள் நிற்பது வழக்கம்.
சாலையோர கடைகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களால், ரயில் நிலைய சாலை வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்த போக்குவரத்து நெரிசலால், பல்வேறு சமயங்களில் ரயிலை தவற விடும் நிலைக்கு பயணியர் தள்ளப்படுகின்றனர்.
ரயில் நிலைய சாலை முகப்பில் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த, மாநில நெடுஞ்சாலைத் துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.