Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவியர் சேர்க்கை

அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவியர் சேர்க்கை

அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவியர் சேர்க்கை

அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவியர் சேர்க்கை

ADDED : ஜூன் 23, 2025 11:07 PM


Google News
திருவள்ளூர்,அம்பத்துார் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அம்பத்துார் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு ஆண்டிற்கான நேரடி மாணவியர் சேர்க்கை, கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. எட்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பயிற்சியில் சேரலாம். வயது வரம்பு இல்லை.

இங்கு தையல் தொழிற்நுட்பம், கட்டட படவரைவாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேருவோருக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவியும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் ஆவணங்களையும் நேரில் எடுத்துவர வேண்டும்.

இதற்கான கட்டணம் ஓராண்டு பிரிவிற்கு 235 மற்றும் இரண்டாண்டு பிரிவுக்கு 245 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, 94440 17528, 99403 72875, 97897 59825, 95660 58460, 63816 82005, 98403 85562 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us