/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாணவேடு ஏரி விவகாரம் புறக்கணித்தாரா கலெக்டர்? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி பாணவேடு ஏரி விவகாரம் புறக்கணித்தாரா கலெக்டர்? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
பாணவேடு ஏரி விவகாரம் புறக்கணித்தாரா கலெக்டர்? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
பாணவேடு ஏரி விவகாரம் புறக்கணித்தாரா கலெக்டர்? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
பாணவேடு ஏரி விவகாரம் புறக்கணித்தாரா கலெக்டர்? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 26, 2025 02:09 AM

ஆவடி, சென்னை ஆவடி - பூந்தமல்லி செல்லும் வழியில், கண்ணப்பாளையம் அருகே உள்ள பாணவேடு ஊராட்சியில், 240 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர், விவசாய தேவைக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
சமீபகாலமாக, குடியிருப்பு, தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. தற்போது, ஏராளமான மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இதனால் ஏரி மாசடைந்து காணப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் மருத்துவ கழிவை அப்புறப்படுத்தாமல், அவற்றின் மேல் மண்ணை கொட்டி மூடி சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் திட்டத்தின் கீழ், நேற்று ஆவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பாணவேடு ஏரியில் நடக்கும் அட்டூழியம் குறித்து ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் ஆய்வு மேற்கொள்ளாததால், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.