/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அங்கன்வாடி கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்அங்கன்வாடி கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 09:49 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில், 14 ஏக்கர் கிராம நத்தம் நிலம் தனிநபர் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த ஆண்டு வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டது.
அந்த இடத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டடம் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. அதற்கான நடவடிக்கை ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை எனக் கூறி , ஒரக்காடு ஊராட்சி கிராமமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாடத்தின்போது, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அரசு நிலத்தில் அங்கன்வாடி மையம்.
நுாலகம், விளையாட்டு திடல், சமுதாய கூடம் ஆகியவை அமைக்கவும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சோழவரம் பி.டி.ஓ. அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணிகள்நடைபெறும் எனதெரிவித்தனர். மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.