/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கால்வாய் அகலத்திற்கு பாலம் அமைக்க கோரிக்கைகால்வாய் அகலத்திற்கு பாலம் அமைக்க கோரிக்கை
கால்வாய் அகலத்திற்கு பாலம் அமைக்க கோரிக்கை
கால்வாய் அகலத்திற்கு பாலம் அமைக்க கோரிக்கை
கால்வாய் அகலத்திற்கு பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 11, 2024 11:03 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், கால்வாய்கள் வழியாக பெரும்பேடு, காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதில், தத்தமஞ்சி, காட்டூர் ஏரிகளுக்கு மழைநீர் கொண்டு செல்லும், கால்வாய், 100மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. ரெட்டிப்பாளையம் - வேலுார் கிராமங்களுக்கு இடையே செல்லும் சாலை, மேற்கண்ட கால்வாயின் குறுக்கே பயணிக்கிறது.
இதற்காக இங்கு சிறு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலமானது, கால்வாயின் அகலத்தை விட சிறியதாக உள்ளது. 100 மீட்டர் கொண்ட கால்வாய்க்கு, 2 மீட்டருக்கும் குறைவான அகலத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டிருப்பதால், மழைநீர் சீராக செல்ல முடியாமல் தடைபடுகிறது.
அணைக்கட்டில் இருந்து ஆர்ப்பரித்து வரும் மழைநீர், மேற்கண்ட சிறுபாலத்தின் வழியாக முழுதும் செல்ல வழியின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களை மூழ்கடிக்கிறது.
காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளுக்கும் மழைநீரை முழுமையாக கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
ஏரிகளுக்கு மழைநீரை சீராக கொண்டு சென்று சேமிக்கவும், நெற்பயிர்களை பாதுகாக்கவும், மேற்கண்ட கால்வாய் பாலத்தை 50 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.