Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நுாலகத்தில் இட நெருக்கடி கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை

நுாலகத்தில் இட நெருக்கடி கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை

நுாலகத்தில் இட நெருக்கடி கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை

நுாலகத்தில் இட நெருக்கடி கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை

ADDED : செப் 08, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
பூந்தமல்லி:பூந்தமல்லி கிளை நுாலகம் இடநெருக்கடியுடன் இயங்குவதால், கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

பூந்தமல்லி நகராட்சி வைத்தீஸ்வரன் கோவில் அருகே, பொது நுாலகத்துறை கட்டுப்பாட்டில் கிளை நுாலகம் இயங்குகிறது.

இங்கு, 8,000 உறுப்பினர்கள், 7,600 புத்தகங்கள் உள்ளன.

தினமும் 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். அரசு தேர்வுக்கு தயாராகும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த நுாலகத்தில் புத்தகங்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.

கட்டடத்தின் தரைதளத்தில் நாளிதழ் படிக்கும் இடமும், மேல்தளத்தில் புத்தகங்கள், கணினிகளும் உள்ளன. தற்போது இங்கு வாசகர்கள் அதிகம் வந்து செல்வதால், போதுமான இடவசதி இல்லை.

எனவே, நுாலகத்தின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான காலி நிலத்தில், கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என, வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us