Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அகூரில் புதிய ரேஷன் கட்டடம் பணி துவங்குவதில் தாமதம்

அகூரில் புதிய ரேஷன் கட்டடம் பணி துவங்குவதில் தாமதம்

அகூரில் புதிய ரேஷன் கட்டடம் பணி துவங்குவதில் தாமதம்

அகூரில் புதிய ரேஷன் கட்டடம் பணி துவங்குவதில் தாமதம்

ADDED : ஜன 08, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், 450 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாடகை கட்டடத்தில் குறுகிய இடத்தில் வழங்கி வந்தனர்.

இதனால் மாதந்தோறும்ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும், பொருட்கள் இருப்பு வைப்பதற்கும் கடும் சிரமப்பட்டனர்.

இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த, ஆறு மாதத்திற்கு முன், புதிய ரேஷன் கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 9.11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிக்கு டெண்டர் விடப்பட்டது.

ஆனால் கட்டடம் கட்டுவதற்கு, ஜல்லிக்கற்கள் மூன்று மாதத்திற்கு முன் சாலையோரம்கொட்டியுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே, புதிய ரேஷன் கடை கட்டடப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு ஒன்றிய பொறியாளர் வரைப்படம் கொடுக்காததால் காலதாமதம் ஆகிறது. ஒரிரு நாளில் வரைபடம் பெற்று பணிகள் துவங்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us