/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நாய்கள் பிடிப்பதற்கு வாகனம் வாங்க தீர்மானம் நாய்கள் பிடிப்பதற்கு வாகனம் வாங்க தீர்மானம்
நாய்கள் பிடிப்பதற்கு வாகனம் வாங்க தீர்மானம்
நாய்கள் பிடிப்பதற்கு வாகனம் வாங்க தீர்மானம்
நாய்கள் பிடிப்பதற்கு வாகனம் வாங்க தீர்மானம்
ADDED : மே 28, 2025 11:43 PM
திருத்தணி, திருத்தணி நகராட்சியில் நகர்மன்ற கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் தலைவர் சரஸ்வதி பூபதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில், வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து, 15வது மாநில நிதிக்குழு மானியம் மூலம், 61.95 லட்சம் ரூபாயில், புதிய துப்புரவு பணிகளுக்கு வாகனங்கள், நாய்கள் பிடிப்பதற்கு வாகனம் வாங்குவது, கொசு மருந்து தெளிப்பான் கருவிகள் மற்றும் விடுபட்ட இடங்களில் குடிநீர் குழாய் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 41.97 லட்சம் ரூபாயில், ஏழு வார்டுகளில் கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால்வாய் மற்றும் கற்சாலை அமைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.