/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவ - மாணவியர் தவிப்பு அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவ - மாணவியர் தவிப்பு
அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவ - மாணவியர் தவிப்பு
அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவ - மாணவியர் தவிப்பு
அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவ - மாணவியர் தவிப்பு
ADDED : செப் 14, 2025 03:04 AM

பள்ளிப்பட்டு:அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், மாணவர்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 100 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இதன் ஒரு பகுதி, நுழைவாயிலின் மீது சாய்ந்து நிற்கிறது.
சுற்றுச்சுவர் இடிந்துள்ள பகுதியில் தான் குடிநீர் குழாயும் அமைந்துள்ளது. இதனால், மாணவர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு குடிநீர் குடிக்க வரும் நிலை உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவரை கடக்கும் மாணவர்கள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.