/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/லட்சுமாபுரத்தில் பேருந்து நிழற்குடை சேதம்லட்சுமாபுரத்தில் பேருந்து நிழற்குடை சேதம்
லட்சுமாபுரத்தில் பேருந்து நிழற்குடை சேதம்
லட்சுமாபுரத்தில் பேருந்து நிழற்குடை சேதம்
லட்சுமாபுரத்தில் பேருந்து நிழற்குடை சேதம்
ADDED : ஜன 02, 2024 07:34 PM

திருத்தணி:சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமம் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கிராமத்தினர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் திருத்தணி மற்றும் திருவள்ளூர் மார்கத்திற்கு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
பயணியர் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை துறையினர் லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்தனர். ஆனால், பராமரிப்பு இல்லாததால் தற்போது நிழற்குடை சேதம் அடைந்து உள்ளது.
மழை மற்றும் வெயில் நேரத்தில் நிழற்குடையில் நிற்க முடியாமல் பயணியர் சிரமப்படுகின்றனர். இதனால், பேருந்து வரும் வரை பயணியர் சாலையோரம் நின்றும், நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் தரையில் உட்கார்ந்திருந்து பயணம் செய்ய வேண்டும்.
எனவே மாவட்ட நிர்வாகம் லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை சீரமைத்து விரிவுப்படுத்தியும், இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.