/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சீயோன் மெட்ரிக் பள்ளியில் 'சைபர்' பாதுகாப்பு கருத்தரங்குசீயோன் மெட்ரிக் பள்ளியில் 'சைபர்' பாதுகாப்பு கருத்தரங்கு
சீயோன் மெட்ரிக் பள்ளியில் 'சைபர்' பாதுகாப்பு கருத்தரங்கு
சீயோன் மெட்ரிக் பள்ளியில் 'சைபர்' பாதுகாப்பு கருத்தரங்கு
சீயோன் மெட்ரிக் பள்ளியில் 'சைபர்' பாதுகாப்பு கருத்தரங்கு
ADDED : ஜன 30, 2024 10:39 PM

சென்னை:சேலையூர் சீயோன் மெட்ரிக் பள்ளியில், சீயோன் மெட்ரிக் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகளின் தலைவர் விஜயன் வழிகாட்டுதலில், இளைய தலைமுறைக்கு சைபர் அச்சுறுத்தலை தடுக்க 'ஆன்லைன்' பயன்பாடு வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.
முன்னணி புத்தக வெளியீட்டாளரான கிப்ஸ் லேர்னிங் பிரைவேட் லிமிடெட் நிறுவன துணை தலைவர் சுச்சேட்டன் எம்.தாருணி இந்த கருத்தரங்கை நடத்தினார்.பள்ளிக்கல்வியின் நிர்வாக பணிகளில், 'ஆன்லைன்' பயன்பாட்டின்போது, சைபர் அச்சுறுத்தல்கள் இல்லாமல் தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்த கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆன்லைன் பயன்பாட்டில், ஆசிரியர்களும் வழிகாட்டுதல்களை தெரிந்து கொண்டு, மாணவர்களுக்கும் அதை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் 'ஆன்லைன்' செயல்பாடுகளை பெற்றோர் அறிந்து கொள்வது, அதை கண்காணிப்பது ஆகியவை குறித்து, பெற்றோருக்கு உரிய ஆலோசனை தர வேண்டும் என, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், அரசின் சைபர் பாதுகாப்பு சட்டங்கள், ஒழுங்குமுறைகள், சைபர் பிரச்னைகளை கையாள்வதற்கான முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.