/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விவசாயிகளுக்கு கை கொடுக்கும் காட்டு மல்லி சாகுபடிவிவசாயிகளுக்கு கை கொடுக்கும் காட்டு மல்லி சாகுபடி
விவசாயிகளுக்கு கை கொடுக்கும் காட்டு மல்லி சாகுபடி
விவசாயிகளுக்கு கை கொடுக்கும் காட்டு மல்லி சாகுபடி
விவசாயிகளுக்கு கை கொடுக்கும் காட்டு மல்லி சாகுபடி
ADDED : பிப் 05, 2024 11:23 PM

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நெல், கரும்பு உள்ளிட்டவற்றுடன், மலர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, மல்லி, முல்லை உள்ளிட்டவற்றுடன், காட்டு மல்லியும் பயிரிட்டு வருகின்றனர்.
மழைக்காலத்தில்முல்லையும், கோடை காலத்தில் மல்லியும் அதிகளவில் பூக்கும். கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்டவையும் இதமான சூழலில் வளரும் தன்மை கொண்டவை.
ஆனால், எல்லா பருவ காலத்திலும் குறைவின்றி பூக்கும் மலர், 'காக்கடா' என அழைக்கப்படும் காட்டு மல்லி. மல்லி, முல்லை, ரோஜா உள்ளிட்டவை திருவிழா மற்றும் பண்டிகை காலத்தில் கிலோ 1,000 ரூபாயை தாண்டி விற்பனையாவது உண்டு. எல்லாராலும் அந்த விலைக்கு பூக்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில், அவர்களுக்கு கை கொடுப்பது காட்டு மல்லி தான்.
குறைந்த விலையில் மனநிறைவை தரும் காட்டு மல்லிக்கு, விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே என்றும் வரவேற்பு உள்ளது.