/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல் வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 06, 2025 02:44 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் வேளகாபுரம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, ஆரணி ஆற்றை ஒட்டி சுடுகாடு இருந்தது.
இந்த சுடுகாட்டிற்கு வழி இல்லாததால், வயல்வெளியில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வந்தது. இதனிடையே, தனிநபர் ஒருவர் சுடுகாடு அமைக்க இடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ஒவ்வொரு முறையும் கிராமத்தில் உள்ளவர்கள் யாராவது இறந்தால், சடலத்தை எடுத்து செல்வதில் தகராறு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, ரோஸ், 70, என்பவர் வயது மூப்பு காரணமாக இறந்தார்.
வழக்கம் போல, சுடுகாடு தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி., சாந்தி மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தியதில், மேட்டுபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை எரிப்பதாக முடிவு செய்யப்பட்டு, நேற்று இரவு 7:30 மணி சடலத்தை எரித்தனர்.