/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரி சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு உரிமையாளர்களை எச்சரித்து விடுவிப்பு பொன்னேரி சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு உரிமையாளர்களை எச்சரித்து விடுவிப்பு
பொன்னேரி சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு உரிமையாளர்களை எச்சரித்து விடுவிப்பு
பொன்னேரி சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு உரிமையாளர்களை எச்சரித்து விடுவிப்பு
பொன்னேரி சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு உரிமையாளர்களை எச்சரித்து விடுவிப்பு
ADDED : செப் 17, 2025 02:24 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சுற்றித்திரிந்த, 30 மாடுகளை பிடித்து, பட்டியில் அடைத்தனர். பின் உரிமைகோரி வந்த உரிமை யாளர்களை எச்சரித்து விடுவிக்கப்பட்டன.
பொன்னேரி நகராட் சிக்கு உட்பட்ட புதிய தேரடி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அரிஅரன் பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால், பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து தொடர் புகார்கள் வந்த நிலையில், கலெக்டரின் உத்தரவின்படி, ஒருவாரமாக, பொன்னேரி நகராட்சி நிர்வாகம், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து வருகிறது.
அவை பூங்காவில் வைத்து பாதுகாத்து பராமரிக்கப்படுகின்றன.
உரிமைகோரி வரும் மாடுகளின் உரிமயைாளர்களிடம் கடிதம் பெற்று, மீண்டும் சாலைகளில் மாடுகளை திரியவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு, விடுவிக்கப்படுகின்றன. இதுவரை 25 மாடுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளதாவது:
சாலைகளில் மாடுகளை திரியவிட்டால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிடிபடும் மாடுகளை உரி மைகோரி வருபவர்களிடம், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மாடுகள் இரண்டாவது முறை பிடிபடும்போது, அவர் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.