/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு
சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு
சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு
சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 18, 2025 08:02 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களில், 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலி பணியிடங்களுக்கு, நான்கு ஒன்றியத்தில் இருந்து, 900 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு நேர்காணல், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.
முதல் நாளான நேற்று, 300 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பஞ்சு உள்ளிட்டோர் சான்றுகள் சரிபார்ப்பு செய்து, நேர்காணல் நடத்தினர். இன்றும், நாளையும் நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.