Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்சார ரயில் மீது கல் வீச்சு கல்லுாரி மாணவர் கைது

மின்சார ரயில் மீது கல் வீச்சு கல்லுாரி மாணவர் கைது

மின்சார ரயில் மீது கல் வீச்சு கல்லுாரி மாணவர் கைது

மின்சார ரயில் மீது கல் வீச்சு கல்லுாரி மாணவர் கைது

ADDED : செப் 14, 2025 02:53 AM


Google News
ஆவடி:மின்சார ரயிலில் கற்கள் வீசிய கல்லுாரி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, நேற்று முன்தினம் காலை சென்ற மின்சார ரயிலில், மாநில கல்லுாரி மாணவர்கள் பயணம் செய்தனர்.

அந்த ரயில், அண்ணனுார் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், மாநில கல்லுாரி மாணவர்கள் அமர்ந்திருந்த ரயில் பெட்டி மீது, கற்களை வீசி உள்ளார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு சென்று, ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர் ஈஸ்வரன், 20, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us