/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறுவாபுரி கோவில் குளம் முதல்வர் திறந்து வைப்பு சிறுவாபுரி கோவில் குளம் முதல்வர் திறந்து வைப்பு
சிறுவாபுரி கோவில் குளம் முதல்வர் திறந்து வைப்பு
சிறுவாபுரி கோவில் குளம் முதல்வர் திறந்து வைப்பு
சிறுவாபுரி கோவில் குளம் முதல்வர் திறந்து வைப்பு
ADDED : ஜூன் 18, 2025 07:59 PM
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள கோவில் குளத்தை சீரமைக்க, 3.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, புதிய படித்துறைகள் அமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், நேற்று திறப்பு விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறுவாபுரி கோவிலில் நடந்த திறப்பு விழாவில், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சிவஞானம், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் பங்கேற்றனர்.