Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா: வாகன ஓட்டிகள் திணறல் பயணம்

நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா: வாகன ஓட்டிகள் திணறல் பயணம்

நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா: வாகன ஓட்டிகள் திணறல் பயணம்

நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா: வாகன ஓட்டிகள் திணறல் பயணம்

ADDED : ஜூலை 04, 2025 03:05 AM


Google News
Latest Tamil News
திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில்இளைப்பாறும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பூந்தமல்லி, நசரத்பேட்டை, வரதராஜபுரம் உட்பட பல பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் பல இடங்களில் இளைப்பாறுகின்றன.

இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமத்தோடு சென்று வருவதோடு விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் பலியாகி வரும் நிலை ஏற்படுவதால் வாகன ஒட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும் தேசிய நெடுஞ்சாலையில் இளைப்பாறும் மற்றும் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us