/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அனுமதியின்றி விளம்பர பேனர் பிரியாணி கடைக்காரர் மீது வழக்குஅனுமதியின்றி விளம்பர பேனர் பிரியாணி கடைக்காரர் மீது வழக்கு
அனுமதியின்றி விளம்பர பேனர் பிரியாணி கடைக்காரர் மீது வழக்கு
அனுமதியின்றி விளம்பர பேனர் பிரியாணி கடைக்காரர் மீது வழக்கு
அனுமதியின்றி விளம்பர பேனர் பிரியாணி கடைக்காரர் மீது வழக்கு
ADDED : ஜன 12, 2024 11:48 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரே எல்.ஐ.சி. சிக்னல் பகுதியில் அனிபா பிரியாணி கடை உள்ளது விளம்பர பேனரில், இரண்டாம் ஆண்டு திருக்குறள் போட்டி என்றும், திறக்குறள் சொன்னால் பிரியாணி இலவசம் என்றும் விளம்ப பேனர் கடந்த இரு தினங்களுக்கு முன் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் நகர காவல் உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், திருவளளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து திருவள்ளூர் தேரடி, ஆயில் மில் மற்றும் மணவாள நகர் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டருந்த, பிரியாணி கடை விளம்பர பேனரை அகற்றினர்.
மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித அனுமதியும் இல்லாமல் விளம்ப பேனர் வைக்கப்பட்டதாக, அனிபா பிரியாணி கடை உரிமையாளர் பஷீர் ரஹ்மான் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருவதாக நகர போலீசார் தெரிவித்தனர்.