/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மக்களுடன் முதல்வர் திருத்தணியில் முகாம்மக்களுடன் முதல்வர் திருத்தணியில் முகாம்
மக்களுடன் முதல்வர் திருத்தணியில் முகாம்
மக்களுடன் முதல்வர் திருத்தணியில் முகாம்
மக்களுடன் முதல்வர் திருத்தணியில் முகாம்
ADDED : ஜன 12, 2024 11:43 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் சரஸ்வதிபூபதி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் அருள் வரவேற்றார்.
இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ. சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தனர். பின் பயனாளிகளுக்கு அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் சான்றுகளை தி.மு.க.- எம்.எல்.ஏ. சந்திரன் வழங்கினார்.
முகாமில், திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, காவல்துறை, மின்சார வாரியம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை போன்ற துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த துறையில் பல்வேறு நலதிட்ட உதவிகள் கேட்டு மொத்தம், 450 பேர் விண்ணப்பம் வழங்கினர். இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.