/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு
ADDED : செப் 11, 2025 09:50 PM
திருவள்ளூர்:முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், முதிர்வு தொகை பெற சமூக நலத் துறையினரை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை பத்திரம் பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்து, முதிர்வு தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத பயனாளிகளின் விபரங்கள் tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள பயனாளிகள், முதிர்வு தொகையை பெற, வைப்பு நிதி பத்திரம், 10ம் வகுப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களை நேரில் அணுகலாம்.
மேலும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044- - 2989 6049 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.