/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வரும் 30, 1ல் பேச்சு போட்டி விண்ணப்பிக்க அழைப்பு வரும் 30, 1ல் பேச்சு போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
வரும் 30, 1ல் பேச்சு போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
வரும் 30, 1ல் பேச்சு போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
வரும் 30, 1ல் பேச்சு போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 25, 2025 09:52 PM
திருவள்ளூர்:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், வரும் 30, 1-ம் தேதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நம் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் கருத்துகளையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, வரும் 30 மற்றும் ஜூலை 1ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
வெற்றி பெறும் மூவருக்கு முறையே, 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும், அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு, சிறப்பு பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்போர் விபரத்தை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சலில், வரும் 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.