/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பத்ம விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு பத்ம விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
பத்ம விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
பத்ம விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
பத்ம விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 29, 2025 09:28 PM
திருவள்ளூர்:சமூக சேவை புரிந்ததோருக்கு மத்திய அரசின் உயர்ந்த விருதான பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு, பத்ம விருது, குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.
வரும், 2026ம் ஆண்டிற்கான விருதுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, தகுதி வாய்ந்தோர், விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை, https://awards.gov.in, http://padmaawards.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.