UPDATED : மார் 24, 2025 01:36 AM
ADDED : மார் 23, 2025 08:26 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஏரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 58. இவரது மகன் ரவிகுமார், 12. வடமதுரை அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அதன்பின், தங்களது விளை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, ரவிக்குமாரை பாம்பு கடித்தது.
அவரை மீட்ட பெற்றோர், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.