/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு மாணவர்களுக்கு பிரியாணி விருந்து அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு மாணவர்களுக்கு பிரியாணி விருந்து
அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு மாணவர்களுக்கு பிரியாணி விருந்து
அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு மாணவர்களுக்கு பிரியாணி விருந்து
அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு மாணவர்களுக்கு பிரியாணி விருந்து
ADDED : ஜூன் 30, 2025 11:20 PM

திருவள்ளூர் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 82 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நான்கு வகுப்பறை கட்டடம் திறக்கப்பட்டு, மாணவ - மாணவியருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
திருவள்ளூர் வட்டம் பூண்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிருஷ்ணாபுரம், நெய்வேலி, நம்பாக்கம், மோவூர், சதுரங்கப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அதிகரித்து வரும் மாணவ - மாணவியருக்கு கூடுதல் வகுப்பறை தேவைப்பட்டது. இதையறிந்த தனியார் நிறுவனம் ஒன்று, சமூக பங்களிப்பு நிதி 82 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்தாண்டு நான்கு வகுப்பறை கட்டும் பணியை துவக்கியது.
இப்பணி நிறைவடைந்த நிலையில், வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவரில் தமிழர் கலாசார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
புதிய வகுப்பறை திறப்பு விழா நேற்று நடந்தது. திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.
பின், பள்ளி மாணவ - மாணவியருக்கு சுடச்சுட பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.