/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழுதடைந்த ரேஷன் கடை அச்சத்தில் பயனாளிகள் பழுதடைந்த ரேஷன் கடை அச்சத்தில் பயனாளிகள்
பழுதடைந்த ரேஷன் கடை அச்சத்தில் பயனாளிகள்
பழுதடைந்த ரேஷன் கடை அச்சத்தில் பயனாளிகள்
பழுதடைந்த ரேஷன் கடை அச்சத்தில் பயனாளிகள்
ADDED : ஜன 08, 2025 01:04 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தின் கிழக்கில், சானுார்மல்லாவரம் செல்லும் சாலையில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில், 300 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கட்டடம் தற்போது பழுதடைந்துள்ளது. தளம் உருக்குலைந்து கான்கிரீட் உதிர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கவரும் நுகர்வோர், அச்சத்துடன் பொருட்களை வாங்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் போதிய இடவசதி இன்றியும் தவித்து வருகின்றனர்.
தளம் பழுதடைந்துள்ளதால், மழைநீர் கசியும் நிலை உள்ளது. இதனால், உணவு பொருட்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சகஸ்ரபத்மாபுரம் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.