/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை மோசடி செய்ததாக வங்கி முற்றுகை ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை மோசடி செய்ததாக வங்கி முற்றுகை
ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை மோசடி செய்ததாக வங்கி முற்றுகை
ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை மோசடி செய்ததாக வங்கி முற்றுகை
ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை மோசடி செய்ததாக வங்கி முற்றுகை
ADDED : செப் 11, 2025 03:15 AM

திருவள்ளூர்:வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் பண மோசடி செய்ததாக வங்கியை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த கூவம் ஊராட்சி, பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீபா, 35. இவர், மப்பேடு காவல் நிலையம் அருகே உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில், ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தார்.
இவர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, சம்பளம் வழங்கும் பணி மேற்கொண்டு வந்தார்.
இவருக்கு, வரும் 14ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், நேற்று 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.
அப்போது, 'தற்கொலை செய்து கொண்ட தீபா, பண மோசடியில் ஈடுபட்டதாக' வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மப்பேடு போலீசார், முற்றுகையிட்ட மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 'தீபா, வங்கிக்கு வரும் மக்களிடம் பணம் செலுத்தவும், எடுக்கவும் உதவிபுரிந்தார்.
மேலும், 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு, சம்பளம் வழங்கும் பணியும் மேற்கொண்டு வந்தார். வங்கிக்கு வரும் மக்கள், அவரிடம் பணத்தை கொடுத்து, அதை வங்கி கணக்கில் செலுத்த சொல்லி விட்டுச் செல்வர். இதில், அவர் குறைவான தொகையையே வங்கியில் செலுத்தி வந்துள்ளார்' என தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.