/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடிப்படை வசதிகள் இல்லாத வங்கனுார் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாத வங்கனுார் பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத வங்கனுார் பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத வங்கனுார் பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத வங்கனுார் பேருந்து நிலையம்
ADDED : ஜூன் 09, 2025 03:04 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் வங்கனுார் பேருந்து நிலையம் மிகவும் பழமையானது. இந்த பேருந்து நிலையம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
வங்கனுார் மற்றும் அதையொட்டிய 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980களில், இந்த பேருந்து நிலையத்திற்கு பெரும்பாலான பேருந்துகள் வந்து சென்று கொண்டிருந்தன; தற்போது ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த பேருந்து நிலையத்தில் பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு கழிப்பறை மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டது. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படாததாலும், நிழற்குடை பராமரிக்கப்படாததாலும் சீரழிந்து வருகின்றன.
பேருந்து நிலையத்தின் மேற்கில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
பயணியருக்கு இருக்கை வசதியும் இல்லை. அதிகரித்து வரும் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, வங்கனுார் பேருந்து நிலையத்தை தரம் உயர்த்தும் விதமாக இருக்கை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புனரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.