/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குறுகி வரும் சாலையால் விபத்தில் சிக்கிய ஆட்டோ குறுகி வரும் சாலையால் விபத்தில் சிக்கிய ஆட்டோ
குறுகி வரும் சாலையால் விபத்தில் சிக்கிய ஆட்டோ
குறுகி வரும் சாலையால் விபத்தில் சிக்கிய ஆட்டோ
குறுகி வரும் சாலையால் விபத்தில் சிக்கிய ஆட்டோ
ADDED : ஜூன் 23, 2025 03:09 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் ---- என்.என்.கண்டிகை மாநில நெடுஞ்சாலை 14 கி.மீ., துாரம் உடையது. 3 மீட்டர் அகலம் கொண்ட இச்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விவசாயம் செய்யப்படுகிறது.
இதனால், சாலை குறுகி காணப்படுவதால், அப்பகுதியில் எதிரெதிரே வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
நேற்று மதியம் 3:00 மணிக்கு அரும்பாக்கம் கிராமத்தில் இருந்து ஆற்காடுகுப்பம் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கிய போது, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், சரக்கு ஆட்டோ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
எனவே, அவ்வப்போது நிகழும் விபத்துக்களை தடுக்க, ஆற்காடுகுப்பம் -- அரும்பாக்கம் சாலையின் இருபுறமும் நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.