/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., பயணியர் வேண்டுகோள்ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., பயணியர் வேண்டுகோள்
ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., பயணியர் வேண்டுகோள்
ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., பயணியர் வேண்டுகோள்
ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., பயணியர் வேண்டுகோள்
ADDED : ஜன 29, 2024 07:03 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாமல் பயணியர் சிரமப்படுகின்றனர்.
சென்னை - அரக்கோணம் ரயில் நிலைய மார்க்கத்தில் திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 500க்கும் மேற்பட்டோர் விரைவு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் டிக்கெட் எடுப்பதற்கும், முன்பதிவு செய்வதற்கும் பணம் தேவைப்படும் போது ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் தற்போது ரயில் நிலையத்தில் ஒரு ஏ.டி.எம்., மையம் கூட இல்லாததால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும் என, ரயில் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.