/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மலை பகுதியில் தீ வைப்பு மர்மநபர்கள் அட்டகாசம் மலை பகுதியில் தீ வைப்பு மர்மநபர்கள் அட்டகாசம்
மலை பகுதியில் தீ வைப்பு மர்மநபர்கள் அட்டகாசம்
மலை பகுதியில் தீ வைப்பு மர்மநபர்கள் அட்டகாசம்
மலை பகுதியில் தீ வைப்பு மர்மநபர்கள் அட்டகாசம்
ADDED : மார் 22, 2025 11:34 PM

திருத்தணி, திருத்தணி பெரியார் நகர், கன்னிகாபுரம், இந்திரா நகர் மற்றும் நேருநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில், அதிகளவில் செடிகள், மரங்கள் உள்ளன. மேலும், மலைப்பகுதிகளில் கோரை புல் வளர்ந்துள்ளது. தற்போது, கோடை வெயில் கொளுத்தி வருவதால், மலைப்பகுதிகளில் உள்ள கோரை புல் காய்ந்துள்ளன.
இந்த பகுதிகளில் சிலர் கால்நடை ஓட்டிச் சென்று மேய்த்தும் வருகின்றனர். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், கோரை புல்லுக்கு தீ வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், காற்றில் பரவி மலைப்பகுதி முழுதும் தீப்பிடித்து எரிகிறது.
இதனால், மலைப்பகுதி அருகே வசிக்கும் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் மான், மயில், பாம்பு, குருவிகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு, மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாமண்டூர்
திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச்சாலையில், மாமண்டூர் காப்பு காடு உள்ளது. இந்த காப்பு காடு, நேற்று மாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதிவாசிகள், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து திருத்தணி வனத்துறையினர் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.